தமிழர்-வணிகம்

இயற்கை உணவுகள் என்றால்?

இரசாயனங்கள் சேர்க்காத, நெல்மணிகள் மூலம் தயாரித்த கைக்குத்தல் அரிசி, அவல், முளைகட்டிய தானியங்கள் மற்றும் காய்கறிகள் இவற்றையெல்லாம், அவற்றின் ஆற்றலை முழுமையாக உடலுக்கு கொண்டுசெல்ல, சமைக்காமல் அப்படியே சாப்பிடலாம்..

என்னென்ன காய்கறிகள் ?

நெல்லிக்கனி, வாழைத்தண்டு, முள்ளங்கி, பூசணி, கேரட் மற்றும் வெண்டைக்காய் போன்ற காய்கறிகளை, சமைக்காமலே சாப்பிட்டு அவற்றின் சத்துக்களை முழுமையாக அடையலாம்.

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சாறுகள்

அருகம்புல்சாறு, வாழைத்தண்டுசாறு, துளசிச்சாறு, மணத்தக்காளி சாறு, அகத்தி சாறு, முருங்கை கீரை சாறு, இவற்றை அவ்வப்போது குடித்துவர, அவை உடலின் தாதுநிலையை சீராக்கி, உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

அருகம்புல் சாறு தயாரிக்கும் முறை

சிறு துண்டுகளாக்கிய பின் அம்மியில் அல்லது ஆட்டு உரலில் நீர் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த புல்லைப் பிழிந்து சாறு எடுத்து ஐந்து முதல் ஆறு மடங்கு நீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். நீருக்குப் பதிலாக இளநீரையும் சேர்த்துக் கொள்ளலாம்.

தினமும் காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல் சாறு குடிக்க வேண்டும். இதை கொஞ்சம் கொஞ்சமாக சுவைத்துக் குடிக்க வேண்டும். குடித்த 2 மணி நேரத்திற்குப் பிறகு மற்ற உணவு வகைகள் சாப்பிடலாம்.

வாழைத்தண்டு சாறு செய்முறை

வாழைத் தண்டை துண்டு துண்டாக நறுக்கி சிறிதளவு மோரில் போட்டு மிக்சியில் அடித்து வடிகட்டி வைக்கவும். மீதமுள்ள தயிரைக் கடைந்து தாராளமாக நீர் ஊற்றி ஐஸ்போட்டோ அல்லது பிரிட்ஜில் வைத்தோ குளிரவைக்கவும்.இதில் வடி கட்டி வைத்துள்ள வாழை தண்டு சாற்றை கலக்கவும்.

இஞ்சிச்சாறு, உப்பு, பெருங்காயத்தூள்சேர்க்கவும்

வயிற்று உப்பிசம், வயிற்று கோளாறு நீங்கும். கிட்னி ஸ்டோன் உள்ளவர்களுக்கு வாழைத்தண்டு சிறந்த பலனை தரும். நீர் கடுப்பு நோய் உள்ளவர்களுக்கு உபாதைகளை நீக்கும். உடல் பருமனாக உள்ளவர்கள்தொடர்ந்து பருகி வர பருமன் குறையும்.

தினமும் துளசி

தினமும் துளசியிலையை காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக மென்று சாறு இறக்கினால், சளி, தொண்டைக்கட்டு நீங்கும். உடலில் உள்ள நச்சுத்தன்மையும் நீக்கும்.

சிற்றுண்டி

காலை சிற்றுண்டியாக, கேரட், முள்ளங்கி, பீட்ரூட் மற்றும் முளைகட்டிய தானியங்கள் கொண்ட காய்கறிகள் நிறைந்த உப்பு சேர்க்காத கலவை இல்லையென்றால், பப்பாளி, சப்போட்டா, மாம்பழம், ஆரஞ்சு, கொய்யா, வாழை, சீதாப்பழம் கொண்ட பழக் கலவை அல்லது பழங்கள் மட்டும் சாப்பிட்டு வரவேண்டும். காலை சமைத்த உணவைத் தவிர்க்கணும்.

கோழி வளர்ப்பு

வீடுகளில் இருந்தபடியே நாட்டுக் கோழியை நல்ல முறையில் வளர்த்துப் பராமரித்து அதிகப் பயன் பெறலாம் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் வரையில் கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகளிலும் நாட்டுக் கோழிகள் வளர்க்கப்பட்டு வந்தன. இதன் மூலம் தங்களது வீடுகளுக்கு தேவையான கோழி முட்டை, இறைச்சி ஆகியவை கிடைத்து வந்தன. மேலும், தனது தேவைக்கு மேல் உள்ள கோழிகளை விற்றும் பணம் சம்பாதித்து வந்தனர்.

© 2021 Vilvam Trust. All Rights Reserved | Design by W3layouts