நம் முன்னோர்கள் செய்த பாரம்பரிய மரபு வேளாண் முறை.
களைகள் கட்டுப்படுத்தப்பட்டு அவை வயலுக்கே இயற்கை உரமாகவும் மாற்றப்படுதல், உருளும் களைக்கருவி மண்ணை பிரட்டி விடுவதால் காற்றோட்டம் கிடைத்தல், மண்ணிலுள்ள நுண்ணுயிரிகள் ஊக்குவிக்கப்படுதல்.
நீரை செயற்கையாக உற்பத்தி செய்ய தமிழர் மரபு சொன்ன வழிமுறையைப் பற்றி விளக்குகிறார் தமிழர் வேளாண்மை -ஞானபிரகாசம்.
இயற்கையான முறையில் முருங்கை சாகுபடி சொட்டு நீர் பாசனத்தில் - செந்தில்குமார் ஆண்டிமடம் அரியலூர் மாவட்டம்.
கோ. நம்மாழ்வார் (G. Nammalvar, 6 ஏப்ரல் 1938 - 30 திசம்பர் 2013) தமிழ்நாட்டின் முதன்மை இயற்கை அறிவியலாளர்களில் ஒருவர் ஆவார். இவர் தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளிக்கு அருகேயுள்ள இளங்காடு என்னும் சிற்றூரில் பிறந்தார்.[1] இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை இளங்கலைப் படிப்பை படித்தார். பசுமைப் புரட்சி, தொழில்மயமாக்கம், சூழல் மாசடைதல் தொடர்பாக காரமான விமர்சனங்களையும் ஆக்கபூர்வமான மாற்றுகளையும் முன்வைத்தவர். தமிழ்நாட்டில் இயற்கை வழி வேளாண்மை முறைகளை ஊக்குவித்தவர். வானகம், குடும்பம் அமைப்பு உட்பட பல அரசு சாரா அமைப்புகளின் அமைப்பாளராக இருந்தார். /p>
ஒற்றை நெல் நாற்று நடவு முறையை பயன்படுத்தி (எஸ்.ஆர்.ஐ.,) ஏக்கருக்கு விவசாயிகள் அதிகளவில் மகசூல் பெறலாம்.
கால்நடை வளர்ப்பு (Animal husbandry) என்பது வேளாண்மைத் துறையில், உணவு, கம்பளம், உடல்வலுப் பயன்பாடு என்பவற்றை நோக்கமாகக் கொண்டு, ஆடு, மாடு, குதிரை, மீன், கோழி, வாத்து போன்ற விலங்குகளையும் பறவைகளையும் வளர்ப்பதைக் குறிக்கும். கால்நடைகள் வளர்ப்பது, வாழ்வாதார மட்டத்திலோ அல்லது பெருமளவு இலாபம் தரக்கூடிய வகையிலோ நடைபெறலாம். கால்நடை வளர்ப்பு என்பது நவீன வேளாண்மைத் துறையின் முக்கிய கூறுகளில் ஒன்றாக இருக்கிறது. மனித சமூகம் வேட்டை - உணவு திரட்டலை வாழ்க்கைமுறையாகக் கொண்டிருந்த நிலையிலிருந்து வேளாண்மை நிலைக்கு மாறிய காலத்திலிருந்து கால்நடை வளர்ப்பு இடம்பெற்றுவருகிறது.
வெள்ளாடு “ஏழைகளின் பசு” என்று அழைக்கப்படுகிறது. இது மானாவாரி நிலம் சார்ந்த பண்ணையத் தொகுப்பின் முக்கிய அங்கம் ஆகும். மேட்டுப்பாங்கான, நிலங்களில் பசுக்களையும், எருமைகளையும் வளர்க்க இயலாது. எனவே இத்தகைய சூழலுக்கு ஆடுவளர்ப்பு உகந்தது. ஆடு வளர்ப்பில் குறைந்த முதலீட்டைக் கொண்டு நல்ல லாபம் பெறலாம்.
வீடுகளில் இருந்தபடியே நாட்டுக் கோழியை நல்ல முறையில் வளர்த்துப் பராமரித்து அதிகப் பயன் பெறலாம் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் வரையில் கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகளிலும் நாட்டுக் கோழிகள் வளர்க்கப்பட்டு வந்தன. இதன் மூலம் தங்களது வீடுகளுக்கு தேவையான கோழி முட்டை, இறைச்சி ஆகியவை கிடைத்து வந்தன. மேலும், தனது தேவைக்கு மேல் உள்ள கோழிகளை விற்றும் பணம் சம்பாதித்து வந்தனர்.
© 2021 Vilvam Trust. All Rights Reserved | Design by W3layouts